தமிழ் இலக்கிய வினா - விடை தொடர்ச்சி 441- 1000.


441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444. தம் மனத்து எழுதிப் படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445. தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447. தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448. தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449. தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450. தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
465. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471. தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
476. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
477. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர்
479. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
480. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
481. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
482. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
485. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
487. தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
488. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
490. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
492. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
494. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496. தானைமறம் – தும்பை
497. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
498. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்
501. திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502. திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503. திரமிள சங்கம் தோற்றுவித்தவர் - வச்சிர நந்தி
504. திரமிளம் என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505. திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506. திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507. . திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள் - பாலி,பிராகிருத மொழிகள்,
508. திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509. திராவிட வேதம் - திருவாய் மொழி
510. திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511. திரிகடுகம் - சுக்கு,மிளகு,திப்பிலி
512. திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513. திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514. திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515. திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516. திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517. திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520. திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521. திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522. திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523. திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524. திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் - திருச்செந்தூர்
525. திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526. திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் - பெ.சுந்தரம் பிள்ளை
527. திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528. திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர் - நம்பியாண்டார் நம்பி
529. திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530. திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531. திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532. திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533. திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534. திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் - டாக்டர் கார்டுவெல்
535. திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536. திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537. திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538. திருப்புகழ் பாடியவர் - அருணகிரி நாதர்
539. திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் - பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. .திருவாசகப் பாடல் எண்ணிக்கை - 656
550. .திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551. . திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552. .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553. .திருவெங்கை உலா ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
554. .திருவேரகம் – சுவாமிமலை
555. .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556. .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557. .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558. .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559. .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560. .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561. .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562. .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563. .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876.
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. . தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு - சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் - தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
601. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
603. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது--திரணதூமாக்கினியார்
604. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை- சமதக்கினி
605. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
611. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
612. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
613. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
614. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
615. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
616. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
619. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
620. நமர் - ஒற்றர்
621. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
623. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
624. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
626. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627. நளவெண்பா காண்டங்கள் – 3
628. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
629. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்.
699. . பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
700. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
701. பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
703. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
704. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
705. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
706. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
707. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
708. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
709. பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
710. பத்தாம் திருமுறை - திருமந்திரம்
711. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
712. பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
714. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
715. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
716. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
717. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
718. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
719. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
720. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து - நான்காம் பத்து
721. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
722. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார்
723. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
724. பதிற்றுப் பத்து திணை - பாடாண்திணை
725. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
அரிசில்கிழார் / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
728. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
730. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
731. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
732. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
733. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே புற நூல் - களவழி நாற்பது
734. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
735. பரணி நூலின் உறுப்புக்கள்- 13
736. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
737. பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
738. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
741. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
742. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
745. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746. பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
747. பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
748. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் –
750. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
751. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
752. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
753. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
754. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
755. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
756. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
757. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
758. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
759. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
760. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
761. பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
762. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
763. பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
764. பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
765. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்.
826. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
827. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828. பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
829. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
830. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832. பொருட்கலவை நூல் – பரிபாடல்
833. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
834. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
837. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
841. மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
842. மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
843. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
844. மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
845. மண நூல் – சீவக சிந்தாமணி
846. மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
847. மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
848. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
849. மண்திணி ஞாலம் - பூமி
850. மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
851. மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
852. மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
853. மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
854. மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
855. மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
856. மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
857. மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
858. மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
859. மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
860. மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
861. மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
862. மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
863. மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
864. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
865. மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
866. மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
867. மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
868. மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
869. மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
870. மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
871. மனத்தைக் கவரும் கலை – நாடகக்கலை
872. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
873. மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
874. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க 
875. மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
876. மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
877. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
878. மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
879. மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
880. மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
881. மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
882. மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
883. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
884. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
885. மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார் 
886. மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
887. மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
888. மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள் –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
889. மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
890. மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
891. மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
892. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
893. மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு – மிருச்ச கடிகம்
894. முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர்.
895. முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
896. முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,கோ.கேசவன்,கே.முத்தையா
897. முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
898. முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
899. முசு – குரங்கு
900. முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
901. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
902. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
903. முதல் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 4449
904. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 89
905. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
906. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
907. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
908. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
909. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
910. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
911. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
912. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
913. முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
914. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
915. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை - தொல்காப்பியம்
916. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
917. முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
918. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
919. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
920. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
921. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
922. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
923. முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
924. மூதின் முல்லை – வாகை
925. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
926. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
927. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
928. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
929. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
930. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
931. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
932. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
933. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
934. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
935. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
936. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
937. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
938. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
939. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
940. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
941. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
942. யாப்பருங்கலம் உரையாசிரியர் - குணசாகரர்
943. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
944. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
945. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
946. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
947. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
948. ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
949. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
950. . ராஜி நாவலின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை.
951. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
952. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர்
953. வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
954. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
955. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
956. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
957. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து நிறுத்துவது – தழிஞ்சி
958. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
959. வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
960. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
961. வட்கார் மேல் செல்வது - வஞ்சி
962. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
963. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
964. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
965. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
966. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
967. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர் - குலோத்துங்கன்
968. வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
969. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
970. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
971. விரிச்சி - குறி கேட்டல்
972. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
973. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
974. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
975. வீடும் வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன்
976. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
977. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
978. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
979. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
980. வெட்சி - நிறைகவர்தல்
981. வெண்டேர்ச் செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
982. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
983. வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
984. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
985. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் - இரேனியஸ்
986. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
987. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
988. வேய் - உளவு-ஒற்றாராய்தல்
989. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
990. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்
991. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
992. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
993. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
994. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
995. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
996. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
997. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
998. மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
999. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
1000. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்.
Previous
Next Post »