வேற்சொல்லைக் கொண்டு பிற சொற்களை உண்டாக்கல்.

வேற்சொல்லைக் கொண்டு பிற சொற்களை உண்டாக்கல்.
தா,படி இந்த இரண்டு சொற்களை சான்றுக்கு எடுத்துக் கொள்வோம்.
1)வினைமுற்று.
தந்தான்,படித்தான்.
அதாவது ஒரு வேலையை ஒருவன் செய்வதுபோல்.
2)பெயரெச்சம்.
தந்த பையன்,
படித்த பையன்.
3) எதிர்மறைப் பெயரெச்சம்.
தாராத பையன்
படியாத பையன்.
த கடைசியில் வரவேண்டும்.
4) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
தாராப் பையன்
படியாப் பையன்.
கடைசியில் துணைக்கால் வரவேண்டும்.
6) வினையெச்சம் .
தந்து நின்றான்
படித்துத் தேறினான்.
7)வியங்கோள் வினைமுற்று.
தருக, படிக்க.
8)அடுக்குத்தொடர்.
தா தா
படிபடி.
9)தன்மை ஒருமை வினைமுற்று.
தந்தேன் படித்தேன்.
10)தன்மைப் பன்மை வினைமுற்று.
தந்தோம் படித்தோம்.
11)முன்னிலை ஒருமை வினைமுற்று.
தந்தாய் படித்தாய்.
12)முன்னிலைப் பன்மை வினை முற்று.
படி த்தீர்கள்.
13)ஏவல் வினைமுற்று.
தருவாய்.
Previous
Next Post »