வேற்றுமை

வேற்றுமை 8 வகைப்படும் .
1) முதல் வேற்றுமை இதை எழுவாய் வேற்றுமை என்றும் கூறுவர்.ஒரு எழுவாய் ஒரு பயனிலைக் கொண்டு முடிவது
மரம் வளர்ந்தது
முருகன் வந்தான் இதற்கு உருபு கிடையாது.இதை அல்வழிப் புணர்ச்சியில் சேர்ப்பர்.ஏதாவது ஒரு வேற்றுமை உருபை ஏற்கும் பெயராய் இருக்கும். அது ஒரு வினையோ பெயரையோ ஒரு வினாச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடியும்.
எ-டு
சாத்தன் வந்தான்
அவன் பெரியவன்
அவன் யார்?
எழுவாய்,வினைமுதல் செய்பவன் கர்த்தா எல்லாம் ஒரே பொருள் தருவன.
2) இரண்டாம் வேற்றுமை இதைச் செயபடுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.இதன் உருபு ஐ ஆகும்
இஃது ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீத்தல் ஒத்தல் உடைமை ஆகிய பொருள்களில் வரும்
எ-டு
1)வீட்டைக் கட்டினான்- ஆக்கல்
2) வீட்டை இடித்தான்- அழித்தல்
3) சேலத்தை அடைந்தான்-அடைதல்
4) மனைவியைத் துறந்த்தான்- நீத்தல்
5) புலியைப் போன்றவன்- ஒத்தல்
6)பொன்னைப் பெற்றவன்- உடைமை
3.மூன்றாம் வேற்றுமை அதன் உருபு ஆல், ஆன்ஒடு,ஓடு என்பன.
அவை கருவி ,கர்த்தா,உடன் நிகழ்ச்சிப் பொருளகளில் வரும். எடுத்துகாட்டு
வாளால் வெட்டினான் ---கருவி
வாளான் வெட்டினான் ---கருவி
அரசனால் ஆகிய கோயில்---கர்த்தா
அரசனான் ஆகிய கோயில்---கர்த்தா
மகனொடு தந்தை வந்தார்- உடன்நிகழ்ச்சி
மகனோடு தந்தை வந்தார்- உடன்நிகழ்ச்சி
கர்த்தா ஏவுதல் கர்த்தா,இயற்றுதல் கர்த்தா என இருவகைப்படும்.
Previous
Next Post »