உலக காது கேளாதோர் தினம்

👂 உலக காதுகேளாதோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 1958 இல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது.
👂 சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
👂 பாதிக்கப்பட்டோர் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், அரசியல் வாதிகள், வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோரின் கவனத்தை காது கேளாதோர் சமுதாயத்தின் சாதனைகளையும், சவால்களையும் நோக்கித் திருப்பும் வண்ணம் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
👂 உலகத்தில் காது கேளாதவர்களின் எண்ணிக்கை 36 கோடி என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்களில் 80 சதவீதம் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக காது கேளாதோர் அமைப்பு தெரிவிக்கிறது.
உடுமலை நாராயணகவி
✍ பழம்பெரும் திரைப்படப் பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பு+விளைவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.
✍ இவர் புரவியாட்டம், சிக்குமேளம், தப்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார்.
✍ இவர் சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்களை எழுதினார். இவர் முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர். 'கவிராயர்" என்று அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.
Previous
Next Post »