இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | Indian Constitution in tamil - 6

இந்திய அரசியலமைப்பு
அடிப்படைக் கடமைகள்
1976-ல் செய்யப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் பத்து அடிப்படைக் கடமைகளை அரசமைப்பில் இணைத்தது. அடிப்படைக்கடமைகள் 51 எனும் உறுப்பாக அரசியலமைப்பின் IVA பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
1) இந்திய அரசமைப்பிற்குக் கீழ்ப்படிவதுடன் அரசமைப்பு நிறுவனங்கள், லட்சியம், தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
2) விடுதலைப் போராட்டத்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
3) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
4) அழைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுத் தேசியச் சேவை செய்ய வேண்டும்.
5) சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைகக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் சகோரத்துவமும் இணைக்கமும் ஏற்படப் பாடுபடுவதுடன் பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
6) நமது கூட்டுக்கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
7) காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
8) அறிவியல் உணர்வு, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
9) வன்முறையை வெறுத்து ஒதுக்கிப் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்.
10) தனிப்பட்ட அளவிலும் கூட்டுச் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும்.
11) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குவது
2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 86-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி 11-வது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்டது.
Previous
Next Post »