TNPSC மாதிரி வினா விடைகள்.
1. கண்ணா தேசியப் பூங்கா (மாண்டியா) அமைந்துள்ள மாநிலம் - மத்தியப் பிரதேசம்
2. வனவிலங்கு வாரம் எந்த ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது - 1955.
3. எலியைக் கொல்லுவதற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி - துத்தநாக பாஸ்பைடு
4. வைட்டமின் D குறைவினால் சிறுவர்களுக்கு ஏற்படுவது - ரிக்கெட்ஸ்
5.முத்துராமலிங்கத் தேவர் எந்த மாவட்டத்தில் பிறந்தார் - இராமநாதபுரம்
6. இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - ஈ.டி. பெல்
7. திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலை இயற்றியவர் - குமரகுருபரர்
8. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர் - வாணிதாசன்
9. இரத்த சிவப்பணுக்களில் பிளாஸ்மோடியம் இருப்பதை முதன் முதலில் கண்டறிந்தவர் - லாவேர்ன்
10. வேரின் வெளிப்புற அடுக்கு - எப்பிபிளெமா
11. காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது - உரோமக் கற்றைகள்
12. இந்திய அரசாங்கம் வனவாழ் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்த ஆண்டு - 1972
13. இரட்டுறமொழிதல் என்ற பாடலைப் பாடியவர் யார் - காளமேகப்புலவர்
14. தொன்மை மிக்க உலக மொழிகள் எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் - தேவநேயப் பாவாணர்
15. மதுரை நகருக்கு உள்ள வேறு பெயர்கள் - கூடல், ஆலவாய்
16. இலக்கணக் குறிப்புத் தருக. தைத்திங்கள் - காலப்பெயர்
17. ந.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் - ந.வேங்கட மகாலிங்கம்
18. கனகம் என்ற சொல்லின் பொருள் - பொன்.
EmoticonEmoticon