வரலாறு - வேதகாலப் பண்பாடு - 2

1. ................ மற்றும் .............. குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன - வழிபாடு மற்றும் வேள்விகள்
2. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது எது - உபநிடதங்கள்
3. ............... எனக் கூறப்படும் ஆரண்யகங்கள் மந்திரம், வேள்வி, பலியிடுதல் போன்றவற்றை கூறுகிறது - காட்டு இலக்கியம்
4. ரிக் வேதகாலத்தில், ஆரியர்கள் பெரும்பாலும் ............ பகுதியிலேயே வாழ்ந்தனர் - சிந்து
5. ரிக் வேதத்தில் ............. அல்லது ................ பாயும் பகுதி என்ற குறிப்பு வருகிறது - சப்த சிந்து அல்லது ஏழு நதிகள்
6. ஏழு நதிகள் யாவை - ஜீலம், சீனாப், ராவி, பியாய், சட்லஜ், சிந்து மற்றும் சரஸ்வதி
7. எதன் மூலம் ரிக் வேதகால மக்களின் அரசியல், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளலாம் - ரிக் வேத பாடல்கள்
8. .............. அல்லது ............ என்பதே ரிக் வேதகால அரசியலுக்கு அடிப்படையாக இருந்தது - குலம் அல்லது குடும்பம்
9. கிராமத்தின் தலைவர் .............. எனப்பட்டார் - கிராமணி
10. பல கிராமங்கள் இணைந்து ............. என்ற அமைப்பு தோன்றியது - விசு
11. விசு அமைப்பின் தலைவர் ............. எனப்பட்டார் - விஷயபதி
12. மிகப்பெரிய அரசியல் ஒருங்கிணைப்பு ............. எனப்பட்டது - ஜன
13. ரிக் வேத காலத்தில் பெரும்பாலும் ........... ஆட்சி முறையே வழக்கிலிருந்தது - முடியாட்சி
14. ரிக் வேதகால நிர்வாகத்தில் அரசனுக்கு உதவியாக புரோகிதரும், ............. என்ற படைத்தளபதியும் இருந்தனர் - சேனானி
15. ............, ............. என்ற இரண்டு புகழ் வாய்ந்த அவைகளும் இருந்தன - சபா, சமிதி.
Previous
Next Post »