நடந்து முடிந்த 31வது ஒலிம்பிக் போட்டியின் சில தகவல்கள்

1) 2016 ஆண்டின் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடு எது?
2) இது எத்தனையாவது ஒலிம்பிக் போட்டியாகும்?
3) 2016 ஆண்டின் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழா நடைபெற்ற இடம் எது?
4) 2016 ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் பங்கெடுத்த நாடுகள் எது?
5) 2016 ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் எத்தனை பதக்கங்கள் கொடுக்கப்பட்டன?
6) நடப்பு ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் புதியதாக இணைக்கப்பட்ட இரு விளையாட்டுகள் எது?
7) தாமசு பாக் அவர்கள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடத்தப்படும் எத்தனையாவது ஒலிம்பிக் போட்டி இது?
8) விளையாட்டுத்திறமையுள்ள அகதிகள் பங்கேற்பதாக முதன் முறையாக உருவாக்கப்பட்ட அகதிகள் ஒலிம்பிக் அணியானது எந்த நாட்டுக் கொடியின் கீழ் விளையாடியது?
9) 2016 கோடை ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் எத்தனை விளையாட்டு போட்டிகள், எத்தனை பிரிவுகள் நடைபெற்றன?
10) 2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் மூன்று நாடுகள் எது?
11) 2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவானது எந்த மைதானத்தில் அமைந்துள்ளது?
12) 2016 ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கின் பல்வேறு போட்டியில் எத்தனை உலக சாதனைகளும் எத்தனை ஒலிம்பிக் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன?
13) ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டியில் ‘டிரிபிள் டிரபிள் டிரபிள்’ தங்கம் வென்ற தடகள வீரர் யார்?
14) ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நாட்டின் மைக்கேல் பெல்ப்ஸ் அவர்கள் 2016 ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் எத்தனைப் பதங்களை வென்றார்?
15) கடந்த 40 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் அடுத்தடுத்த 5000 மீ, 10,000மீ ஓட்டப்பந்தய ஒலிம்பிக் போட்டிகளில் இந்த இரண்டு பிரிவுகளிலும் தங்கப்பத்தை வசப்படுத்திய 2 வது வீரர் என்ற சாதனையை புரிந்த ஓட்டப்பந்தய வீரர் யார்?
16) 2016 ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஒரே ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற 5 வது பெண் என்ற சாதனை படைத்த வீராங்கனை யார்?
17) ஒலிம்பிக் வரலாற்றில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து இரு ஒலிம்பிக்கிலும் தங்கம் கைப்பற்றிய 2 வது வீரர் என்ற சாதனை புரிந்த தடகள வீரர் யார்?
18) ஒலிம்பிக்கில் 92 ஆண்டுகளுக்கு பிறகு சேர்க்கப்பட்ட ரக்பி செவன்ஸ் போட்டியில் பெண்கள் அணியில் தங்கம் வென்ற நாடு எது?
19) அக்டோபர் 2, 2009 அன்று கோபனாவன், டென்மார்க்கில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் எத்தனையாவது அமர்வு குழுவில் போட்டிகளை நடத்தும் நகரமாக ரியோ டி ஜெனிரோ அறிவிக்கப்பட்டது?
20) 2016 ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் எந்த பிரிவில் முதல் சாதனை நிகழ்த்தப்பட்டது? முதல் சாதனை நிகழ்த்திய வீரர் யார்?
21) 2016 ஆண்டின் Rio – Olympic போட்டியில் முதல் தங்கத்தை பெற்ற வீரர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த பிரிவில் தங்கம் வென்றார்?
22) 31 வது ரியோ ஒலிம்பிக் போட்டியின் மையக்கருத்து யாது?
23) ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பதக்கங்கள் வென்ற முதல் தம்பதி என்ற பெருமையை பெற்றவர்கள் யார்? எந்த பிரிவில் பதக்கம் வென்றனர்?
24) ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் தனி பிரிவில் அதிக வயதில் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற நீச்சல் வீரர் யார்?
25) ஒலிம்பிக் 100 மீ பட்டர்பிளை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று குறைந்த நேரத்தில் கடந்தவர் என்ற புதிய உலக சாதனையும் படைத்த வீரர் யார்?
26) ரியோ – 31 வது ஒலிம்பிக் – டென்னிஸ் போட்டியில் – ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அணி வீரர்கள் யார்?
27) நவீன ஒலிம்பிக் போட்டியில் 1000 தங்கப்பதக்கங்கள் வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்ற நாடு எது?
28) Rio – Olympic – ஒற்றையர் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் யார்?
29) ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு முறை ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்த வீரர் யார்?
30) Rio – Olympic 2016 – ஆண்கள் கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற அணி எது?
31) Rio – Olympic 2016 – பெண்கள் கால்பந்து போட்டியில்
தங்கம் வென்ற அணி எது?
32) Rio – Olympic 2016 – ஆண்கள் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற அணி எது?
33) Rio – Olympic 2016 – பெண்கள் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற அணி எது?
34) Rio – Olympic 2016 – மகளிர் கூடைப்பந்து போட்டியில் 8 வது முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ள அணி எது
35) முதன் முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற அகதிகள் அணியில் பங்கேற்ற மொத்த வீரர்கள் எத்தனை பேர்?
36) 31 வது Rio – Olympic 2016 – போட்டியில் பங்குபெற்ற வீரர்களில் குறைந்த வயதுடைய வீரர் யார்?
37) 31 வது Rio – Olympic 2016 – போட்டியில் பங்குபெற்ற வீரர்களில் அதிக வயதுடைய வீரர் யார்?
38) 31 வது ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
39) 31 வது ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடான பிரேசில் அணி பதக்கப்பட்டியலில் எத்தனையாவது இடத்தை பெற்றது?
40) 2016 ஆண்டின் ரியோ ஒலிம்பிக் போட்டியின் சின்னம் யாது?
41) 31 வது ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நாடுகள் எது?


விடைகள்:
1) பிரேசில் – ரியோ டி ஜினிரோ
2) 31 வது ஒலிம்பிக் போட்டி
3) மரக்கானா விளையாட்டு அரங்கம் (ஆகஸ்ட் 5)
4) கொசோவோவு (KOSOVO), தெற்கு சூடான் (SOUTH SUDAN)
5) 306 பதக்கங்கள்
6) ரக்பி செவன், குழிப்பந்தாட்டம் (கோல்ஃப்)
7) முதல் ஒலிம்பிக் போட்டி
8) ஒலிம்பிக் கொடியின் கீழ்
9) 28 விளையாட்டுகள், 41 பிரிவுகள், 306 நிகழ்வுகள்
10) ஜெர்மனி, பெரிய பிரித்தானியா, நெதர்லாந்து
11) மரக்கானா விளையாட்டு அரங்கம் (ஆகஸ்ட் 21)
12) 27 உலக சாதனைகள் மற்றும் 91 ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன
13) ஜமைக்கா வீரர் – உசேன் போல்ட் (2008 ஆண்டு, 2012 ஆண்டு, 2016 ஆண்டு)
14) 5 தங்கம் மற்றும் 1 வெள்ளி
15) பிரிட்டன் வீரர் – மோ பாரா
16) அமெரிக்கா – சிமோன் பைல்ஸ் (19 வயது)
17) கென்யா – டேவிட் ருடிசோ (2016 ஒலிம்பிக்கில் 42:15 விநாடிகளில் கடந்தார்)
18) ஆஸ்திரேலிய அணி (நியுசிலாந்து அணி – வெள்ளி, கனடா – வெண்கலம்)
19) 121 வது அமர்வு குழு
20) கிம் வூஜின் (தென்கொரிய வீரர்) – வில்வித்தை (ரிகர்வ் பிரிவு) பிரிவில் 700 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார்
21) கின்னி த்ராஷெர் – அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் – 100 மீ ரைபிள் பெண்கள் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்
22) அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
23) சீனா நாட்டை சேர்ந்த தம்பதி - பாங் வெய் மற்றும் டூ லீ – 10 மீ ஏர் ரைபிள் பைனல் (பாங் வெய் வெண்கலம்; டூ லி வெள்ளி பதக்கமும் வென்றனர்)
24) அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் (31 வயது)
25) ஜோசப் ஸ்கூலிங் – சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் –
50:39 வினாடி நேரத்தில் கடந்து சாதனை படைத்தார்
26) ஸ்பெயின் நடால் மற்றும் மார்க் லோபஸ் (எதிரணி – ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா மற்றும் டெகாவு ஹொரியா)
27) அமெரிக்க நாடு
28) பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆன்டி முரே
29) ஆன்டி முரே – பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்
30) பிரேசில் அணி (வெள்ளி – ஜெர்மனி; வெண்கலம் – நைஜிரியா)
31) ஜெர்மனி (வெள்ளி – சுவீடன்; வெண்கலம் – கனடா)
32) அர்ஜெண்டினா (வெள்ளி – பெல்ஜியம்; வெண்கலம் – கனடா)
33) பிரிட்டன் (வெள்ளி – நெதர்லாந்து; வெண்கலம் – ஜெர்மனி)
34) அமெரிக்க அணி
35) 10 பேர்கள்
36) அமெரிக்க நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் கனாக் ஜா (16 வயது)
37) அமெரிக்கா நாட்டை சேர்ந்த குதிரைப்பந்தய வீரர் பிலிப் டட்டன் (52 வயது)
38) அமெரிக்க நாடு - 121 பதக்கங்கள் [தங்கம் (46); வெள்ளி (37); வெண்கலம் (38)]
39) 13 வது இடம் – 19 பதக்கங்கள் [தங்கம் (7); வெள்ளி (6); வெண்கலம் (6)]
40) வினிசியஸ் என்னும் சின்னம்
41) இரண்டாவது இடம் – பிரிட்டன் - 67 பதக்கங்கள் (தங்கம் – 27); மூன்றாவது இடம் – சீனா – 70 பதக்கங்கள் (தங்கம் – 26).
Previous
Next Post »