வேதியியல் - தாதுப் பொருட்கள்.

* மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன இரும்பின் தாதுக்களாகும்.
* ரூடைல், இல்மடைட் ஆகியவை டைட்டானியத்தின் தாதுக்களாகும்.
* பிச்சு பிளெண்ட், கார்னோடைட் ஆகியன யுரேனியத்தின் தாதுக்கள்.
* ஜிர்கான், பேடிலைட் ஆகியன ஜிர்கோனியத்தின் தாதுக்கள்.
* கார்னோடைட், பேட்ரோனைட், வெனடினைட் ஆகியன வனேடியத்தின் தாதுக்களாகும்.
* பைரோலுசைட், ஹிஸ்மனைட், மாங்கனைட் ஆகியவை மாங்கனீன் தாதுக்கள்.
* குரோடைட், குரோகாயிசைட் ஆகியன குரோமியத்தின் தாதுக்களாகும்.
* பெண்டலன்டைட், சோனபைட், குப்பல் நிக்கல் அல்லது நிக்கோலைட், கார்னிரைட் ஆகியன நிக்கலின் தாதுக்கள்.
* பாக்சைட், கிரியோலைட், பெல்ஸ்பார் ஆகியன அலுமினியத்தின் தாதுக்கள்.
* மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை தாமிரத்தின் தாதுக்கள்.
* சின்னபார் என்பது பாதரசத்தின் தாதுவாகும்.
* கலீனா, துத்தநாக கந்தகக் கல் ஆகியவை கந்தகத்தின் தாதுப் பொருட்கள்.
* காலமின், சிங்கைட் ஆகியவை துத்தநாகத்தின் தாதுப் பொருட்கள்.
* டாலமைட், ஜிப்சம், ஃப்ளூரோஸ்பார், சுண்ணாம்புக்கல் ஆகியவை கால்சியத்தின் தாதுக்கள்.
* மேக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு ஆகியவை மெக்னீசியத்தின் தாதுக்கள்.
* கேசிட்டரைட் அல்லது டின்ஸ்டோன் எனப்படுவது வெள்ளீயத்தின் தாதுப்பொருளாகும்.
* கயோலின், பெல்ஸ்பார் ஆகியன சிலிகானின் தாதுப் பொருட்கள்.
* சில்வனைட், காரனைட், சால்ப் பீட்டர் ஆகியவை பொட்டாசியத்தின் தாதுப்பொருட்கள்.
* சாதாரண உப்பு மற்றும் சிலிசால்ட் பீட்டர் ஆகியவை சோடியத்தின் தாதுப் பொருட்கள்.
* ஸ்பெரிலைட், க்யூப்ரைட், பிராக்கைட் ஆகியவை பிளாட்டினத்தின் தாதுப் பொருட்களாகும்.
* அர்ஜெண்டைட், குளோரார்ஜிரைட், பெரார்ஜிரைட் ஆகியவை வெள்ளியின் தாதுப் பொருட்கள் ஆகும்.
* கலீனா, செருசைட் ஆகியவை காரீயத்தின் தாதுக்கள்.
* சில்வனைட், காலவரைட், பிஸ்மத் ஆரைட் ஆகியவை தங்கத்தின் தாதுப் பொருட்கள்.
Previous
Next Post »