வேதியியல் - உலோகக் கலவைகள்.

* டியூராலுமினியத்தில் 95 சதவீதம் அலுமினியமும், 4 சதவீத செம்பும் உள்ளது.
* அல்நிக்கோ என்பது அலுமினியம், நிக்கல், கோபால்ட் சேர்ந்த கலவையாகும்.
* பிட்டானியா உலோகம் என்பது 93 சதவீத தகரமும், 5 சதவீத அண்டிமணியும், 2 சதவீத செம்பும் கொண்ட கலவையாகும்.
* 90 சதவீத தகரம், 7 சதவீத அண்டிமணி, 3 சதவீத செம்பும் கொண்ட கலவை பாபிட் உலோகம் எனப்படும்.
* 64 சதவீத இரும்பும், 36 சதவீத நிக்கல் கொண்ட கலவை இன்வார் எனப்படும் நிக்கல் கலவையாகும்.
* மோனா உலோகம் என்பது 67 சதவீத நிக்கல் மற்றும் 28 சதவீத செம்பு கொண்ட கலவையாகும்.
* பித்தளை என்பது 60 முதல் 90 சதவீத செம்பும், 10 முதல் 40 சதவீத துத்தநாகமும் கொண்ட கலவையாகும்.
* 80 சதவீத செம்பும், 20 சதவீத தகரமும் கொண்டது பெல் உலோகம் எனப்படும்.
* ஜெர்மன் வெள்ளி எனப்படும் கலவையில் செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகியவை காணப்படும்.
* 90 சதவீத செம்பும், 10 சதவீத துத்தநாகமும் கொண்டது பிரான்ஸ் தங்கம் ஆகும்.
* கன் மெட்டல் அல்லது கன் உலோகம் என்பது 89 சதவீத செம்பும், 10 சதவீத தகரம் மற்றும் 1 சதவீத துத்தநாகமும் கொண்டதாகும்.
* எவர்சில்வர் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் கலந்த கலவையாகும்.
Previous
Next Post »