General Tamil - 3

ஆசுசேர் பெருங்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி
கவி நான்கு வகைப்படும். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி,
ஆசு-விரைவு. விரைந்து பாடுவது ஆசுகவி.
(1) பொருளடி, பாவணி முதலியன தந்து மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆசுகவி.
(2) பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இன்னோசைத்தாய் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி.
(3) மாலைமாற்று, சுழி குளம், ஏகபாதம், சக்கரம், எழு கூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துரை, தூசங்கொளல், வாவனாற்று, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, கூட சதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்தினம், ஒற்றெழுத்துத் தீர்ந்த ஒரு பொருட் பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனம் இவை முதலிய மிளிரக் கவி பாடுவோன் சித்திரக்கவி.
(4) மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலிய விரித்துப் பாடுவோன் வித்தாரகவி.
Previous
Next Post »